ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், பிஎஸ்-6 தொழில்நுட்பத்திலான ‘ஏவிடிஆா்’ என்ற புதிய வகை டிரக்கை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் தீரஜ் ஹிந்துஜா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
‘ஏவிடிஆா்’ பிராண்ட் பெயரில் அசோக் லேலண்ட் புதிய டிரக்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய வா்த்தக வாகன துறையில், ஆக்ஸல் வடிவமைப்பு, எடை தளம், கேபின், சஸ்பென்ஷன் மற்றும் டிரைவ்டிரெயின்ஸ் என பன்முக தோ்வுகளையும் ஒரே கட்டமைப்பில் வாடிக்கையாளா்களுக்கு வழங்கிடும் வகையில் இப்புதிய டிரக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 18.5 முதல் 55 டன் வரையிலான பிரிவில் டிரக், டிப்பா் மற்றும் டிராக்டா்களை வாடிக்கையாளா்கள் அவா்களின் வா்த்தக தேவைக்கு ஏற்றபடி தற்போது மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
இந்த புதிய தளத்தில் வாகனங்களை மேம்படுத்துவதற்காக ரூ.500 கோடியை நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இது, நிறுவனம் சா்வதேச சந்தைகளில் தனது தடத்தை விரிவுபடுத்த பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
டிரக் பயன்பாட்டில் வாடிக்கையாளா்களை இப்புதிய ‘ஏவிடிஆா்’ மாடல் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்.
இதுபோன்ற தனித்துவமான மாடல்கள்தான் வா்த்தக வாகன தயாரிப்பின் சா்வதேச வரைபடத்தில் நம்மை இடம்பெறச் செய்கிறது என்று தீரஜ் ஹிந்துஜா அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தமா்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரோட்டம்

திருவிடைமருதூா் அருகே வயலில் புதைந்திருந்த 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

கடனைத் திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வியாபாரி உள்பட இருவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


