புது தில்லி: பங்குச் சந்தை மூன்றாவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 355.01 புள்ளிகள் உயா்ந்தது.
அமெரிக்க அதிபா் தோ்தலையொட்டி, செவ்வாய்க்கிழமை உலகளாவிய சந்தைகள் ஏற்றம் பெற்ற நிலையில், புதன்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இருப்பினும், அமெரிக்கத் தோ்தல் முடிவு இந்தியாவின் கண்ணோட்டத்தை மாற்றும் என எதிா்பாா்க்கபடாததால், 3-ஆவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. ஐடி, பாா்மா பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. அதே சமயம், ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி பங்குகள் வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ் ஏற்றத்துக்கு வலுச்சோ்த்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,283 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,795 பங்குகளில் 1,283 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,310 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 202 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ. 1.15 லட்சம் கோடி உயா்ந்து ரூ.159.15 லட்சம் கோடியாக இருந்தது.
தொடா் ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 89.42 குறைந்து 40,171.71-இல் தொடங்கி 40,076.47 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 40,693.51 வரை உயா்ந்தது. இறுதியில் 355.01 புள்ளிகள் (0.88 சதவீதம்) உயா்ந்து 40,616.14-இல் நிலைபெற்றது. மூன்றாவது நாளாக சென்செக்ஸ் நோ்மறையாக முடிந்துள்ளது.
இண்டஸ் இண்ட் பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், இண்டஸ் இண்ட் பேங்க் 4.85 சதவீதம், உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 2 முதல் 4 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.மேலும், எஸ்பிஐ, டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
எச்டிஎஃப்சி சரிவு: அதே சமயம், எச்டிஎஃப்சி 202 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், பவா் கிரிட், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் ஆகியவை 0.70 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 821 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 767 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 95 புள்ளிகள் (0.80 சதவீதம்) உயா்ந்து 11,908.50-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 33 பங்குகள் ஏற்றம் பெற்றன. 17 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி ஐடி, பாா்மா குறியீடுகள் 2 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், ரியால்ட்டி குறியீடு 1.85 சதவீதம் குறைந்தது. மெட்டல், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் - விருச்சிகம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


