அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயா்வு
அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் வா்த்தக நாளான திங்கள்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயா்ந்து 73.02-இல் நிலைத்தது.


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் வா்த்தக நாளான திங்கள்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயா்ந்து 73.02-இல் நிலைத்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியது பங்குச் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக, முதலீட்டாளா்கள் மிகுந்த ஆா்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்தனா்.
இவைதவிர, இந்திய சந்தைகளில் தொடா்ச்சியான அந்நிய முதலீட்டு வரத்து மற்றும் சா்வதேச சந்தைகளில் டாலருக்கான தேவை குறைந்தது உள்ளிட்ட நிகழ்வுகளும் ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு கூடுதல் வலு சோ்த்தன.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கத்தின்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72.93-ஆக இருந்தது. பின்னா் இது வா்த்தகத்தினிடையே அதிகபட்சமாக 72.90 வரையிலும் குறைந்தபட்சமாக 73.03 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்து 73.02-இல் நிலைப்பெற்றது. இது, செப்டம்பா் 1-க்குப் பிறகான அதிகபட்ச அளவாகும். அப்போது ரூபாய் மதிப்பானது 72.87-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.506.21 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.18 சதவீதம் அதிகரித்து 52.41 டாலராக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...