/

ரூ.396 கோடி இழப்பைச் சந்தித்த என்எல்சி

நெய்வேலி நிலக்கரி நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட், கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.396.35 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2023, 10:30 pm

DIN

நெய்வேலி நிலக்கரி நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட், கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.396.35 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனம் ரூ.396.35 கோடியை ஒருங்கிணைந்த இழப்பாக பதிவு செய்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.229.88 கோடி ஒருங்கிணைந்த லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.3,982.49 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,845.08 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.