
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை ஒரு சவரன் ரூ. 53,280 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த வாரம் ரூ. 54,000-ஐ தொட்ட தங்கத்தின் விலை, படிப்படியாக குறைந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதல் சிறிது குறைந்தும் அதிகரித்தும் வருகிறது. புதன்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 53,440-ஆக இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 160 குறைந்து, ரூ. 53,280-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து ரூ.95.20-க்கும் ஒரு கிலோ ரூ. 95,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.