/

ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.87-ஆக முடிவு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க டாலர் ஆகியவற்றின் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 13 காசு சரிந்து, வரலாறு காணாத வகையில் ரூ.85.87 ஆக முடிந்தது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 1:07 pm

DIN

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவான அமெரிக்க டாலர் ஆகியவற்றின் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 13 காசு சரிந்து, வரலாறு காணாத வகையில் ரூ.85.87 ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 85.82 ரூபாயாக தொடங்கி, டாலருக்கு நிகராக இதுவரை இல்லாத அளவுக்கு 85.89 ரூபாயாக சரிந்து பிறகு ரூ.85.87-ஆக நிலைபெற்றது.

குறைந்த பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தபோதிலும், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் மந்தமான உணர்வு மற்றும் அந்நிய நிதி தொடர்ந்து வெளியேற்றம் ஆகிய காரணங்களால் ரூபாய் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.