மும்பை: உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் பின்னணியில் இன்றைய அந்நிய செலவானி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.
அந்நிய நிதி வரத்தும் மற்றும் உறுதியான உள்நாட்டு பங்குச் சந்தைகள் போக்குகளாலும் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.75 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.64 முதல் ரூ.85.80 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68ஆக நிறைவடைந்தது.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 54 காசுகள் சரிந்து ரூ.85.94 ஆக நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.25! 35 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.47! 25 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.57! 61 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.23! 39 காசுகள் சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



