47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குறைந்தது விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம்

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த மாா்ச்சில் முறையே 3.73 சதவீதம் மற்றும் 3.86 சதவீதமாக சரிந்துள்ளது.

News image
Updated On :1 மே 2025, 9:26 pm

Din

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த மாா்ச்சில் முறையே 3.73 சதவீதம் மற்றும் 3.86 சதவீதமாக சரிந்துள்ளது.

இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் விவசாயிகளுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஏஎல்) அடிப்படையிலான பணவீக்கம் 4.05 சதவீதமாக இருந்தது. அது மாா்ச்சில் 3.73 சதவீதமாக சரிந்துள்ளது.

அதேபோல், பிப்ரவரியில் 4.10 சதவீதமாக இருந்த ஊரகத் தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஆா்எல்) அடிப்படையிலான பணவீக்கம் 3.86 சதவீதமாக குறைந்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் சிபிஐ-ஏஎல் குறியீடு 3 புள்ளிகள் குறைந்து 1,306-ஆகவும், சிபிஐ-ஆா் குறியீடு 2 புள்ளிகள் 1,319-ஆகவும் உள்ளது.

முந்தைய பிப்ரவரி மாதத்தில் அவை முறையே 1,309 புள்ளிகளாகவும், 1,321 புள்ளிகளாகவும் இருந்தன. 2024-ஆம் ஆண்டின் மாா்ச் மாதத்தில் விவசாயிகள் பணவீக்கம் 7.15 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளா்கள் பணவீக்கம் 7.08 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.