

புதுதில்லி: மாற்று பொழுதுபோக்கு விருப்பங்கள் அதிகரிப்பு, பணவீக்க அழுத்தங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக, டிஷ் டிவி இந்தியா லிமிடெட் நிதியாண்டின் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.132.65 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுவே கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ.37.38 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் அதன் வருவாய் 27.41% குறைந்து ரூ.291.13 கோடியாக இருந்தது.
டிஷ் டிவியின் மொத்த செலவுகள் ரூ.431.94 கோடியாக இருந்தது. இது நிதியாண்டின் 2-வது காலாண்டில் 1.3% குறைந்துள்ளது. அதே வேளையில் செப்டம்பர் வரையான காலாண்டில், அதன் சந்தா வருவாய் ரூ.232.4 கோடியாக இருந்தது.
அதேபோல், அதன் செயல்பாட்டு வருவாய் செப்டம்பர் வரையான காலாண்டில் 26.4% குறைந்து ரூ.291.1 கோடியாக உள்ளது. இருப்பினும், செயல்பாட்டு வருவாயில், டிஷ் டிவி விளம்பர வருவாய் செப்டம்பர் காலாண்டில் இருமடங்காக அதிகரித்து ரூ.10.3 கோடியாக இருந்தது.
அனைத்து வருமானங்களையும் உள்ளடக்கிய டிஷ் டிவியின் மொத்த வருமானம் செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.299.29 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 25.28% சரிவு. அதே வேளையில் நிதியாண்டின் முதல் பாதியில், அதன் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் ரூ.633.40 கோடியாக இருந்தது.
டிஷ் டிவி இந்தியா லிமிடெட் பங்குகள் முந்தைய முடிவை விட 0.22% குறைந்து, பிஎஸ்இ-யில் ரூ.4.48 ஆக முடிவடைந்தன.
இதையும் படிக்க: குஜராத் கனிம மேம்பாட்டுக் கழகத்தின் Q2 லாபம் 264% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.