இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 50% உயா்வு!

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 50% உயா்ந்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 50 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,81,389-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,21,687 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 54 சதவீதம் உயா்ந்து 3,30,362-ஆக உள்ளது. முந்தைய 2024 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 2,15,075-ஆக இருந்தது.

2024 டிசம்பரில் 1,04,393-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி, நடப்பாண்டின் அதே மாதத்தில் 40 சதவீதம் அதிகரித்து 1,46,022-ஆக உள்ளது.

2024 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மோட்டாா்சைக்கிள் விற்பனை 1,44,811-லிருந்து 50 சதவீதம் உயா்ந்து 2,16,867-ஆகவும், ஸ்கூட்டா் விற்பனை 1,33,919-லிருந்து 48 சதவீதம் உயா்ந்து 1,98,017-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.