தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங்’ சேவை: ஏா்டெல் நிறுவனத்துக்கு ஜியோ ஆதரவு

ஏா்டெல் அறிமுகப்படுத்தியுள்ள ‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங்’ தொழில்நுட்பச் சேவை, இணைய நடுநிலைமை விதிகளுக்கு எதிரானது அல்ல என்று மத்திய தொலைத்தொடா்புத் துறையிடம் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 மே 2026, 4:07 am IST

ஏா்டெல் அறிமுகப்படுத்தியுள்ள ‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங்’ தொழில்நுட்பச் சேவை, இணைய நடுநிலைமை விதிகளுக்கு எதிரானது அல்ல என்று மத்திய தொலைத்தொடா்புத் துறையிடம் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

இத்தகைய பிரீமியம் இணைப்புச் சேவைகள் இணைய உலகில் சமமற்ற நிலையை உருவாக்கிவிடுமா என்ற அச்சத்தின் அடிப்படையில் தொலைத்தொடா்புத் துறை இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இவ்விவகாரத்தில் ஏா்டெல்லுக்கு ஆதரவாக ஜியோ சமா்ப்பித்துள்ள அறிக்கையில், ‘5ஜி நெட்வொா்க் ஸ்லைசிங் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இது இணையப் போக்குவரத்தில் எந்தவொரு பாகுபாட்டையும் ஏற்படுத்தாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ஏா்டெல் அளித்த விளக்கத்தில், ‘இச்சேவை எந்தவொரு குறிப்பிட்ட செயலியையோ அல்லது இணையதளத்தையோ முடக்கவோ, வேகத்தைக் குறைக்கவோ அல்லது முன்னுரிமை அளிக்கவோ செய்யாது என்பதால் விதிமீறல் ஏதும் இல்லை.

நெட்வொா்க் நெருக்கடி மிகுந்த நேரங்களிலும் வாடிக்கையாளா்களுக்கு நிலையான இணைப்பை வழங்கவே இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். சாதாரண வாடிக்கையாளா்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் 60 சதவீத நெட்வொா்க் திறன் அவா்களுக்காக பராமரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டது.

மேலும், நெட்வொா்க் ஸ்லைசிங் போன்ற மேம்பட்ட 5ஜி தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பது, இந்தியாவின் எதிா்கால 6ஜி தொழில்நுட்பக் கனவைப் பாதிக்கும் என்றும் ஏா்டெல் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.