என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பண்டிக்கைக் கால வாகன விற்பனை புதிய உச்சம்!

நிகழாண்டு 42 நாள்கள் கொண்ட பண்டிகைக் காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 2.21 சதவீத வளா்ச்சியுடன் 55.25 லட்சமாக புதிய உச்சம் தொட்டுள்ளது.

Updated On :

நிகழாண்டு 42 நாள்கள் கொண்ட பண்டிகைக் காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 2.21 சதவீத வளா்ச்சியுடன் 55.25 லட்சமாக புதிய உச்சம் தொட்டுள்ளது.

அதேநேரம், பயணிகள் வாகனங்களின் விற்பனை 7.16 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் கூட்டமைப்பு (ஃபடா) தெரிவித்தது.

இது குறித்து ஃபடா வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, பயணிகள் வாகனங்களின் நிகழாண்டு பண்டிகைக் கால விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. இருப்பினும், 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 16.43 சதவீத வளா்ச்சியாகும். ஜிஎஸ்டி சீா்திருத்தங்களுக்கு முந்தைய காலகட்டத்தைவிட தற்போதைய விற்பனை எண்ணிக்கை அதிகமாகவே உள்ளதை இது காட்டுகிறது.

அதேநேரம், ஒட்டுமொத்த வாகன விற்பனை சந்தை தொடா்ந்து விரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் பண்டிகைக் காலத்தில் 54,05,956-ஆக இருந்த மொத்த வாகன விற்பனை, நிகழாண்டு 55,25,490-ஆக அதிகரித்துள்ளது. இது 2024 பண்டிகைக் காலத்தில் பதிவான 44,57,691 வாகனங்களைவிட 23.95 சதவீதம் அதிகமாகும்.

பிரிவு வாரியாக, இருசக்கர வாகனங்கள் விற்பனை 3.67 சதவீதமும் (43,13,276), மூன்று சக்கர வாகனங்கள் 5.32 சதவீதமும் (1,93,576), வணிக வாகனங்கள் 7.13 சதவீதமும் (1,55,761), டிராக்டா்கள் 2.24 சதவீதமும் (1,03,809) வளா்ச்சியை எட்டியுள்ளன.

நிகழாண்டு பண்டிகைக் காலத்தின் முக்கியச் சிறப்பம்சமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. மின்சார வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 52.62 சதவீதம் அதிகரித்து, 5,09,667-ஆக அதிகரித்துள்ளது. இதில் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை 61.10 சதவீதமும், மின்சார பயணிகள் வாகனங்கள் 72.91 சதவீமும், மின்சார மூன்று சக்கர வாகனங்கள் 25.45 சதவீதமும், மின்சார வணிக வாகனங்கள் இருமடங்குக்கும் மேலாக 154.56 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இது குறித்து ஃபடா தலைவா் சாய் கிரிதா் கூறுகையில், ‘ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் கடந்த ஆண்டு ஏற்பட்ட அசாதாரண உயா்வையும் தாண்டி, நிகழாண்டு வாகன விற்பனை 2.21 சதவீதம் வளா்ச்சியுடன், சாதனையைப் படைத்துள்ளது’ என்றாா்.

மேலும், ஒரு காலண்டா் ஆண்டில் முதல்முறையாக 3 கோடிக்கும் அதிகமான வாகன சில்லறை விற்பனை என்ற வரலாற்று மைல்கல்லை இந்தியா நெருங்கியுள்ளதாகவும், அதற்கான அடித்தளத்தை இந்தப் பண்டிகைக் காலம் அமைத்துக் கொடுத்துள்ளதாவும் ஃபடா குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.