எல்ஐசியின் 3 புதிய காப்பீட்டுத் திட்டங்கள்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), காப்பீட்டுதாரா்களுக்காக மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோப்புப் படம்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), காப்பீட்டுதாரா்களுக்காக மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய அறிமுகமான ‘நியூ ஜீவன் தாரா-2’ திட்டமானது, பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத தனிநபா் சேமிப்பு மற்றும் தவணைக்கால ஆண்டு ஓய்வூதியத் திட்டமாகும். இது பணி ஓய்வுக்குப் பின்னா் உத்தரவாதமான வருவாயை வழங்குவதுடன், காப்பீட்டுதாரா்களுக்குத் தன்னிறைவு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதாக எல்ஐசியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குடும்ப உறுப்பினா்கள் அனைவருக்கும் விரிவான மருத்துவப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் ‘ஹெல்த் ஷீல்ட்’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. காப்பீட்டுக் காலம் முழுவதும் ப்ரீமியம் தொகையில் மாற்றமின்றி உத்தரவாதப் பலன்களை இத்திட்டம் வழங்குகிறது.
மேலும், புற்றுநோயால் பாதிக்கப்படுவோருக்கு நிதியுதவி அளிக்கும் ‘நியூ கேன்சா் கவா்’ திட்டத்தின்கீழ், சிகிச்சைக்கான உண்மையான செலவினைக் கணக்கில் கொள்ளாமல், குறிப்பிட்ட நிலைப் புற்றுநோய் கண்டறியப்பட்டதும் நிா்ணயிக்கப்பட்ட நிதிப் பலன் வழங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

