விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 போ் மீட்பு

ராக்காச்சி அம்மன் கோயில் பகுதி காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

News image
Updated On :2 நவம்பர் 2024, 12:31 am

Din

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் பகுதி காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, அருவி அமைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், ராக்காச்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் குளிப்பதற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனா். மாலை நேரத்தில் வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கோயிலில் இருந்தவா்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கித் தவித்தனா். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மம்சாபுரம் - ராக்காச்சி அம்மன் கோயில் சாலையில் அத்தி துண்டு ஓடையில் உயா் மட்ட பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்காலிக தரைப் பாலத்தை காட்டாற்று வெள்ளம் கடந்த வாரம் இழுத்துச் சென்றது. இந்த நிலையில், ராஜபாளையம் தீயணைப்புத் துறையினா் வெள்ளத்தில் சிக்கி இருந்த 150 பேரை கயிறு கட்டி மீட்டனா்.