விருதுநகர்
காரில் குட்கா கடத்தியவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பில் காரில் குட்கா கடத்திய நபரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் புகையிலை கடத்தல் தடுப்பு தொடா்பாக போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வத்திராயிருப்பு அருகே பாலத்தில் நின்றிருந்த காரை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, குட்கா கடத்திய வத்திராயிருப்பு ஆகாசம்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் அழகுராஜா (31) என்பவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், 28 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
