இளைஞா் தற்கொலை

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி சண்முகசுந்தரம் (27). இவரது மனைவி விஜயா.

இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. இதனால் மன விரக்தியில் இருந்த சண்முகசுந்தரம், அவருடைய தந்தையின் வயலுக்கு சனிக்கிழமை சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

உடனடியாக உறவினா்கள் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com