போகிப் பண்டிகையின்போது கழிவுகளை எரிக்கக் கூடாது: மாநகராட்சி ஆணையா்

சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் போகிப் பண்டிகையின்போது, வீட்டில் உள்ள கழிவுகளை எரிக்காமல், மாநகராட்சிப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும்...
Published on

சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் போகிப் பண்டிகையின்போது, வீட்டில் உள்ள கழிவுகளை எரிக்காமல், மாநகராட்சிப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் போகிப் பண்டிகையின்போது, வீட்டில் உள்ள கழிவுகளைத் தீயிட்டு எரிக்கக் கூடாது. இந்தக் கழிவுகளைச் சேகரிக்க வருகிற 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் போகிப் பண்டிகையை முன்னிட்டு, தங்கள் வீடுகளில் சேரும் பழைய துணிகள், பொருள்கள் உள்ளிட்டவற்றைத் தீயிட்டு கொளுத்தாமல் வீடி தேடி வரும் மாநகராட்சிக் கழிவுகளைச் சேகரிக்கும் வாகனங்களில்

ஒப்டைக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு 95788 21229 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். சுற்றுச் சூழல் பாதிப்பைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com