விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டி கிராமம் கட்டசேவல்பட்டி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமாா் (24). கட்டடத் தொழிலாளி. இவா் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் கட்டடப் பணிக்கு சென்ற போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். பின்னா், இவா்கள் இருவரும் தாயில்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனா்.
இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி குழந்தைகள் உதவி மைய மேலாளா் நா்மதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் தாயில்பட்டி விசாரணை நடத்திய போது, 17 வயது சிறுமியை ராஜ்குமாா் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நா்மதா அளித்தப் புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

சிறுமியை மணந்த இளைஞா் போக்ஸோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி கைது!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


