< அவ்வப்போது குடிப்பதற்கான நீரைக் காய்ச்சுவதை தவிர்த்து அகலமானப் பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதற்கும் தேவைப்படும் தண்ணீரைக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டால் எரிவாயு அனாவசியமாக விரயமாகாது.
< எரிவாயுவை மிச்சப்படுத்த வேண்டுமானால் எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்கத் தேவையானப் பொருட்களை எல்லாம் போட்டால் அந்த சூட்டிலேயே தாளித்து விடலாம்.
< யாராவது வீட்டில் அழைப்பு மணியை அடித்தாலோ அல்லது தொலைபேசி அழைப்பு வந்தாலோ காஸ் அடுப்பை அணைத்துவிட்டுச் செல்லுங்கள் எரிவாயு மிச்சமாவதுடன் மறதியால் ஏற்படும் சில விபத்துக்களையும் தவிர்க்கலாம்.
< இட்லி பாத்திரத்தில் இட்லி அவிக்கும் போது அதன் அடியில் பருப்பு, உருளைக்கிழங்கு போன்றவற்றை வைத்தால் அருமையாக வெந்துவிடும். எரிவாயுவும் மிச்சமாகும்.
< வீட்டிலுள்ள அனைவரும் ஒரே நேர்த்தில் உணவு அருந்தினால் மீண்டும் மீண்டும் உணவை சூடாக்குவதை தவிர்க்கலாம். எரிவாயுவையும் மிச்சப்படுத்தலாம்.
< அரிசி பருப்பு போன்றவைகளை முன் கூட்டியே ஊறப் போட்டு பிறகு எடுத்து சமைத்தால் அவை விரைவில் வெந்துவிடும். எரிவாயுவும் அநாவசியமாக விரயமாகாது.
< தாளிப்பதற்கு வாணலியை அடுப்பில் வைக்கும்போது அதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட்டு வைத்தால் எரிவாயு மிச்சமாகும்.
< சமையலுக்குத் தேவையான காய்கறிகளை எல்லாம் முன்பே நறுக்கிக் கொண்டு பிறகு அடுப்பைப் பற்ற வைத்தால் எரிவாயு மிச்சமாகும்.
< வாரத்தில் ஒருநாள் இரவில் சமைக்காத இயற்கை உணவுகளான அவல், முளைகட்டிய பயறு, பழங்கள், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். இப்படி வாரத்தில் ஒருநாள் எடுத்துக் கொள்வதால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!

ஐரோப்பாவின் குரோஷியாவில் ரயில் வழித்தட ஒப்பந்தத்தை வசப்படுத்திய இந்திய நிறுவனம்

எதிர்ப்புகள் விலகும் மீன ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 12 2026) 12 ராசிகளுக்கும்! மிதுன ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

