மே. வங்க எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி நியமனம் ரத்து! உயர் நீதிமன்றம் அதிரடி! திருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 காசுகள் சரிந்து ரூ. 92.98 ஆக நிறைவு!சென்செக்ஸ் 989 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,610 க்கு கீழ் வர்த்தகம்!!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

வடாம் டிப்ஸ் ...

வடாம் மாவில் கடைசியாக கொஞ்சம் மீதமிருக்கும் பொழுது அதில் பூஸ்ட் அல்லது போர்ன்விட்டாவை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் நன்றாகக் கரைத்து மாவில் சேர்த்து பிறகு வடாம் பிழியுங்கள்.  வித்தியாசமான கலரில் சாக்லேட் மணத்துடன் வடாம் ரெடி.

Updated On :

<  வடாம் மாவில் கடைசியாக கொஞ்சம் மீதமிருக்கும் பொழுது அதில் பூஸ்ட் அல்லது போர்ன்விட்டாவை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் நன்றாகக் கரைத்து மாவில் சேர்த்து பிறகு வடாம் பிழியுங்கள்.  வித்தியாசமான கலரில் சாக்லேட் மணத்துடன் வடாம் ரெடி.

<  ஜவ்வரிசி வடாம் முத்துமுத்தாக  இருக்க வேண்டுமென்றால் ஊறவைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

<  வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்கக் கற்களை பாலிதின் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருந்து மண், தூசி விழாது.

<  வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டு பார்த்தால் உப்பு  சற்று குறைவாக இருந்தால்தான் காய்ந்தபிறகு உப்பு சரியாக இருக்கும்.

<  அரிசி வடாம் செய்வதற்கு அரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து அரைக்காமல், முதல் நாள் இரவே ஜவ்வரிசியை, ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து வேகவைத்து அரிசி மாவுடன் சேர்த்துச் செய்தால் வடாம் நன்கு வெள்ளையாக இருக்கும்.

<  வடாம் வைத்திருக்கும் பாத்திரத்தில்  சிறிது பெருங்காயத்தூளைப் போட்டு வைத்தால் அதிக நாட்கள் வடாம் கெடாமல் இருக்கும்.

<  டப்பாவில் புதிய வடாம்களை போடுவதற்கு முன்னால் பழைய வடாம்களை ஒரு பாலிதின் கவரில் போட்டு கவருடன் டப்பாவின் மேலாக வைத்திருந்து முதலில் அதை உபயோகித்துவிட வேண்டும்.

<  வற்றல், வடாம் போன்றவற்றை நன்கு காய வைத்து பாலிதின் கவரில் போட்டு டப்பாவில் வைத்தால் பூச்சி வராமல் இருக்கும்.

<  வடாம் வைத்திருக்கும் டப்பாவில் கொஞ்சம் கறிவேப்பிலையையோ துளசியையோ போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.

<  இன்ஸ்டன்ட் வடாம் செய்ய இதோ ஓர் ஐடியா. இரண்டு ஆழாக்கு அரிசியுடன் அரை ஆழாக்கு ஜவ்வரிசி சேர்த்து குக்கரில் சாதமாக வடித்துக் கொள்ளுங்கள். வடித்த  சாதத்துடன் பொடியாக நறுக்கிய 4-5 பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் ஓரிரு நிமிடங்கள் அரைத்தால் வடாம் மாவுத் தயார். அதை அச்சில் போட்டு வடாமாக பிழிய வேண்டியதுதான். மாவு நீர்த்திருந்தால் ஜவ்வரிசி வடாம் போல வட்டமாக ஊற்றிக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.