ஸ்லிம்மாக இருக்கலாம்!
"உடல் எடை குறைய அளவு குறைவாகச் சாப்பிடுவதோ, சாப்பிடாமல் இருப்பதோ சரியல்ல. நாம் என்ன சாப்பிடுகிறோம்?


"உடல் எடை குறைய அளவு குறைவாகச் சாப்பிடுவதோ, சாப்பிடாமல் இருப்பதோ சரியல்ல. நாம் என்ன சாப்பிடுகிறோம்?
எவ்வளவு சாப்பிடுகிறோம்? என்பது தான் முக்கியம். இதுதான் நம் உடல் எடையையும் ஆரோக்கியத்தையும் சீராக வைக்க உதவுகிறது. ஆகவே கவனமாக சாப்பிடுங்கள். ஸ்லிம்மாக இருக்கலாம்'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் எடை நிர்வாக ஆலோசகர் கவிதா தேவ்கன்.
இது குறித்து "டோன்ட் டயட் - 50 ஹாபிட்ஸ் ஆஃப் தின் பீப்பிள்' என்ற நூலை எழுதியுள்ள கவிதா தேவ்கன்(45), 20 ஆண்டுகளாக உடல் எடை மேலாண்மை குறித்த ஆலோசனைகளை அளித்து வருகிறார். தன்னிடம் உடல் எடை குறைய வேண்டுமென ஆலோசனை பெற வந்தவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆலோசனை அளிப்பதோடு, ஆக்கப்பூர்வமாக சில உண்மைகளையும் கண்டறிந்து ஸ்லிம்மாக இருக்க 50 ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் கவிதா.
இந்தப் புத்கத்தை எழுத வேண்டிய அவசியம் குறித்து அவரே கூறுகிறார்:
"உடல் எடை கூடுவதற்கு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனி உணவுகள், குறைவான தேகப் பயிற்சி, அதிகமாக சாப்பிட வேண்டுமென்ற ஆர்வம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். உயிர் வாழ வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொரு நிமிடமும் மனதில் இருந்தாலும், கவனமுடன் சாப்பிடாமல் கண்டபடி சாப்பிடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். நம்முடைய உடலமைப்பு, செய்யும் வேலை, உடலுறுப்புகள், உடல் உழைப்பு, சுவை மற்றும் செய்கை ஆகியவற்றின் அடிப்படையில் தான் நாம் சாப்பிட வேண்டுமே தவிர, உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது தவறு என்பதை விளக்கவே இந்த நூலை எழுதினேன்.
நாம் சாப்பிடக் கூடிய உணவு வகைகள் இருநூறுக்கும் மேல் உள்ளது. நிதானமாக அமர்ந்து இதில் எது நம் உடலுக்கும் மனதுக்கும் பிடித்தமானது என்பதைத் தீர்மானித்து சாப்பிடலாம்.
பெரும்பாலானோர் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி இருக்கும் என்பதில் தேவையில்லாமல் கவலைப்படுவதுண்டு. எடை குறைய எவ்வளவு கலோரி இருக்க வேண்டுமென கேட்பதுண்டு. 50 முதல் 100 கலோரிகள் என வித்தியாசம் இருந்தால் பரவாயில்லை. கலோரி குறைபாடு முக்கியமானது தான். அது இல்லாமல் எடையைக் குறைக்க முடியாது. ஆனால் கவனமுடன், ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் அதுவே கலோரியின் அளவைக் கவனித்துக் கொள்ளும். அதிகமான கலோரி மூலம் உடல் பருமன் அதிகரிப்பதைத் தவிர்க்கலாம்.
ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்க எங்கே நேரம் கிடைக்கிறது? என்று கேட்பதுண்டு. உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், எடை கூடாமல் பாதுகாக்க வேணடுமென்ற எண்ணம் உண்மையிலேயே இருந்தால், அதற்காக நேரத்தை ஒதுக்கியே தீர வேண்டும். அப்படி முடியாத சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சில யோசனைகளையே இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
உங்களுக்கு சில யோசனைகள்:
யிபலவகையான பழங்களை வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்ளவது நல்லது. காலை சிற்றுண்டிக்கும், பகல் உணவுக்கும் இடையே கண்டதை சாப்பிடுவதைத் தவிர்க்க இது ஆரோக்கியமான உணவாகும்.
யிஒரு வாரத்துக்கு தினமும் என்ன சாப்பிடலாம் என்பதைத் திட்டமிடுங்கள். சுலபமான உணவுகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள்.
யிசுலபமாக சமைப்பதற்குரிய பொருள்களை வீட்டில் இருப்பு வையுங்கள். தக்காளிச் சாறு, டின்களில் அடைக்கப்பட்ட உப்பு குறைவான உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
யிமதிய உணவுக்கு பின்னர் அலுவலக வளாகத்திலேயே சிறிது தூரம் நடக்கலாம். பிற்பகல் 3 மணியளவில் பசியெடுத்தால் கையில் உள்ள உணவு வகைகளில் சிறிதளவு சாப்பிடுவதால், இரவு உணவுக்கு முன் ஏற்படும் இடைவெளியில் ஏற்படும் கலோரி இழப்பை ஈடு செய்யலாம்.
- அ.குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...