இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சமையல் சமையல்!

வாழைக்காயைத் தோலுடன் தடிமனான துண்டுகளாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 1:40 pm

மேரி ரஞ்சிதம்.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: 
முற்றிய வாழைக்காய் - இரண்டு, 
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி, 
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி, 
கடுகு - கால் தேக்கரண்டி, 
உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி, 
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி, 
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிது, 
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் தடிமனான துண்டுகளாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வேக வைத்து ஆறியதும் தோலை உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்து மசித்து வைத்துள்ள வாழைக்காயில் கொட்டி உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். இதை எல்லா சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

வாழைக்காய் தாளிப்பு

தேவையானவை: 
முற்றிய வாழைக்காய் - 2, 
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, 
புளி - கொட்டைப்பாக்கு அளவு, 
எண்ணெய் - 2 தேக்கரண்டி, 
கடுகு - கால் தேக்கரண்டி, 
உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி, 
காய்ந்த மிளகாய் - 2, 
கறிவேப்பிலை - சிறிது, 
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி, 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், நறுக்கிய வாழைக்காயைப் போட்டு வேக வைத்து வடித்துக் கொள்ளவும். வாணலியில், எண்ணெய், காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த வாழைக்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.

வாழைப்பூ கோலா உருண்டை

தேவையானவை: 
பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கிண்ணம், 
பொட்டுக்கடலை மாவு - அரை கிண்ணம், 
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி, 
கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி, 
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி, 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை வேக வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் பொட்டுக் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறு மொறு டிபன் இது.

வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை: 
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கிண்ணம்,
கடலைப்பருப்பு -  ஒரு தேக்கரண்டி, 
உளுந்தம்பருப்பு -  ஒரு தேக்கரண்டி, 
எண்ணெய் - கால் தேக்கரண்டி, 
சீரகம் - அரை தேக்கரண்டி, 
தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி, 
தயிர் - ஒரு கிண்ணம், 
பச்சைமிளகாய் - 3, 
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி, 
கடுகு - கால் தேக்கரண்டி, 
கறிவேப்பிலை - சிறிது, 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உப்பு சேர்த்து வாழைத்தண்டை வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை ஊற வைக்கவும். உளுந்தம் பருப்பை சிறிது எண்ணெய்விட்டு வறுத்துக் கொள்ளவும். ஊற வைத்த கடலைப்பருப்புடன், வறுத்த உளுந்தம்பருப்பு, தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, வேக வைத்துள்ள வாழைத்தண்டில் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். கடைசியில் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாழைக்காய் வறுவல்

தேவையானவை: 
முற்றிய வாழைக்காய் - 2, 
பெருங்காயத்தூள், 
மஞ்சள்தூள் - தலா கால் தேக்கரண்டி, 
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி,  
அரிசிமாவு - சிறிது, எண்ணெய், 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி, வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும். பிறகு அரிசி மாவைத் தூவி பிசறவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், பிசறி வைத்துள்ள வாழைக்காயைப் போட்டு கரகரப்பாக பொரித்தெடுக்கவும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.