சமையல்! சமையல்!
கிஸ்மிஸ், டூட்டி புரூட்டி, பேரீச்சம்பழத்தை பாலில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். மையாக இவற்றை அரைத்து, அடி கனமான வாணலியில் போட்டு, அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கிளறவும்.


தேவையானவை:
விருப்பமான ரெடிமேட் கேக் (உதிர்த்தது)-1 கிண்ணம்,
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கி நறுக்கியது)-2
மேசைக்கரண்டி
கிஸ்மிஸ், டூட்டிபுரூட்டி-1 தேக்கரண்டி,
தேன்-தேவையான அளவு,
பால் பவுடர்-1 தேக்கரண்டி,
ஐசிங் சுகர்-2 தேக்கரண்டி,
பால்- தேவையான அளவு

செய்முறை: கிஸ்மிஸ், டூட்டி புரூட்டி, பேரீச்சம்பழத்தை பாலில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். மையாக இவற்றை அரைத்து, அடி கனமான வாணலியில் போட்டு, அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கிளறவும். கலவை கெட்டியானதும் தீயை நிறுத்தவும். உதிர்த்த கேக்கை பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு, கெட்டிப்பட்ட பால் பழக் கலவையை அதில் ஊற்றவும். பால் பவுடர், 1தேக்கரண்டி ஐசிங் சுகர், தேன் ஆகியவற்றை விட்டுப் பிசைந்து சிறு உருளைகளாகப் பிடிக்கவும். கீழே லாலிபாப் ஸ்டிக் செருகவும். மேலே மீதமுள்ள ஐசிங் சுகர் தூவி ஃபிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்துக் கொடுக்கவும்.
தேவையானவை:
டார்க் சாக்லெட் ரெடிமேட் பார்-50 கிராம்,
மில்க் சாக்லெட் பார்-50 கிராம்,
நட்ஸ் (பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா)-2 தேக்கரண்டி,
சாக்லெட் மோல்டு-விருப்பமான வடிவத்தில் உள்ளது.
செய்முறை: சாக்லெட்களை பொடிப் பொடியாக உடைத்துக் கொள்ளவும். டபுள் பாய்லிங் முறையில் உருக்கி கொள்ளவும்
விருப்பமான சாக்லெட் மோல்டில், இந்த உருக்கிய சாக்லெட்டை ஊற்றி, மேலே உடைத்த நட்ஸ் போட்டு, ஃப்ரிட்ஜில் 15-20 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான, அழகான நட்ஸ் சாக்லெட் ரெடி.

குறிப்பு: டபுள் பாய்லிங் முறை என்பது சாக்லெட் நேரடியாக தணலில் உருக்காமல், ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதன் மீது சாக்லெட் உள்ள பாத்திரத்தை வைத்து சூடுபடுத்தி உருக்குவது ஆகும். (சாக்லெட் மீது தண்ணீர் படாமல் செய்ய வேண்டும்) மைக்ரோ அவன் இருந்தால், சில நிமிடங்கள் அதில் வைத்தும் உருக்கிக்கொள்ளலாம்.
தேவையானவை:
பனீர் துருவல், சீஸ் துருவல்-இரண்டும் சேர்த்து
அரை கிண்ணம்,
பிரட் (அ) ரஸ்க் தூள்-புரட்டி எடுக்க,
உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப,
கோதுமை மாவு, மைதா-இரண்டும் சேர்த்து
கால் கிண்ணம்,
வேக வைத்து உரித்து மசித்த உருளைக்கிழங்கு -1 கிண்ணம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்-அரை கிண்ணம்,
மல்லித்தழை-1 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் விழுது-1 தேக்கரண்டி,
சீரகம்-1 தேக்கரண்டி,
தயிர்-கால் கிண்ணம்,
ஃபிரஷ் க்ரீம்-கால் கிண்ணம்.

செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, உப்பு, தயிர், ஃபிரஷ் க்ரீம், பச்சை மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், சீரகம், மல்லித்தழை எல்லாம் போட்டு, துருவிய சீஸ், பனீர் போட்டு கெட்டியாகப் பிசையவும். (கெட்டிப்பதம் வரவில்லை என்றால் சிறிது ரஸ்க் தூள் சேர்க்கலாம்). பெரிய உருண்டைகளாக எடுத்து வடை மாதிரி தட்டவும்.
ஒரு தேக்கரண்டி மைதா மாவில் நீர் விட்டு பசை மாதிரி குழைத்துக்கொள்ளவும். செய்து வைத்துள்ள டிக்கியாவை இதில் முக்கி எடுத்து ரஸ்க் (அ) பிரெட் தூளில் புரட்டி எடுத்து ஃபிரிட்ஜில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், இதைப் பொன்னிறமாக இருபக்கமும் திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும். இதனுடன் சாஸ் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
தேவையானவை:
பாஸ்மதி அரிசி-1 கிண்ணம்,
வறுத்த முந்திரி-1 தேக்கரண்டி,
நறுக்கிய புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை-2 தேக்
கரண்டி,
சிறு சிறு சதுரதுண்டுகளாக நறுக்கிய பனீர்-அரை கிண்ணம்,
காய்ந்த மிளகாய்-தேவைக்கேற்ப,
உப்பு, எண்ணெய்-சிறிது
மிளகு, சீரகம்-தலா 1 தேக்கரண்டி,
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து-தலா 2 தேக்கரண்டி,
வேர்க்கடலை பொடி-1 தேக்கரண்டி,
நெய்-சிறிது

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், பருப்பு வகைகளையும், மிளகு, சீரகத்தையும் போட்டு வதக்கவும். கறிவேப்பிலை, மல்லி, புதினா, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி ஆற விடவும். உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். நெய்யில் பனீரை பொரித்துக் கொள்ளவும். அரிசியை பொலபொலவென்று சாதமாக வடித்துக் கொள்ளவும். ஆறியதும் பொடித்து வைத்தவற்றை இதில் போட்டுக் கிளறி விடவும், அதன்மேல் வேர்க்கடலைப் போடி தூவி ,பொரித்த பனீர் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து கிளறவும் மேலே வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும். மிக ஹெல்த்தியான, சுவையான சாதம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...