சின்னத்திரை  மின்னல்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  "நாம் இருவர் நமக்கு இருவர்'  தொடரில்  செந்திலுக்கு ஜோடியாக  நாயகியாக  நடித்து வருகிறார்  ரச்சிதா.
சின்னத்திரை  மின்னல்கள்!
Published on
Updated on
1 min read

ஸ்டைல் காட்டும் ரச்சிதா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் செந்திலுக்கு ஜோடியாக நாயகியாக நடித்து வருகிறார் ரச்சிதா. விரைவில் கன்னட திரைப் படமொன்றில் கதாநாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்.

பெரியதிரையில் இருக்கும் முன்னணி கதாநாயகிகளுக்கு சமமாக சமூக வலைதளங்களில் தனி ரசிகர் வட்டத்தைக் கொண்டுள்ள ரச்சிதா, சமீபத்தில் புல்லட் ஓட்டுவது போன்ற புகைப்படங்கள் சிலவற்றை அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ஒரு ரைடர் போல் உடையணிந்து ராயல் என்பீல்ட் பைக்கை ஸ்டைலாக, ஓட்டிச் செல்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் அவரது ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

தானாக கிடைத்த வாய்ப்பு!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "திருமகள்' தொடரில் வில்லி ஆனந்தவல்லியாக நடித்து வருபவர் ஜீவிதா. இவர், தனது சின்னத்திரை என்டரி குறித்து கூறுகிறார்: ""சின்ன வயதிலிருந்தே டான்ஸ்ல ஆர்வம் அதிகம். அதற்காகதான் சென்னை வந்தேன். இங்கே வந்ததும் ஒரு டான்ஸ் ஸ்கூல் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அது இதுவரை நிறைவேறவில்லை. ஒருமுறை, ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க சென்றேன். அங்கே "மனதில் உறுதி வேண்டும்' தொடரோட ஷூட் போயிட்டிருந்தது. வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் சின்னத்திரைக்குள் வந்தேன். அதைத் தொடர்ந்து "வைராக்கியம்', "ஆபீஸ்', "தேவதை', "பாசமலர்', "நிலா', "எங்க வீட்டுப் பெண்', "சிவரகசியம்' என தொடர்ந்து நடித்து வந்தேன். தற்போது, "திருமகள்' தொடரில் நடித்து வருகிறேன்.

"ஆபீஸ்' தொடரில் வில்லி செளந்தர்யாவாக நடித்தபோது நல்ல ரீச் கிடைத்தது. அந்த கேரக்டரை அந்த டைம்ல திட்டாதவங்களே கிடையாது. வெளியே போகும்போதெல்லாம் அடிச்சிடுவாங்களோ என்று கூட பயந்தது உண்டு.

பொதுவாக, சின்னத்திரையைப் பொருத்தவரை, பகலில் ஒளிபரப்பாகும் தொடர்களைவிட, இரவில் ஒளிபரப்பாகும் தொடரில் நடிக்கும்போதுதான் அதிக ரீச் இருப்பதாக உணர்கிறேன்.

பெரியதிரையில், "கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் அக்காவாக நடித்தேன். அடுத்து ஹரி சார் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்திருக்கிறேன். இன்னும் மூன்று படங்கள் வெளியாகாமல் இருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com