திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

நானும் விருந்தாளிதான்!

போலந்துத் துறவியான "ஹோபட்ஸ் கெய்ம்' சிறந்த ஞானி! எளிமையான வாழ்வை மேற்கொண்டவர். அவரைக் காண பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். அவர்களுக்குத் தன்

News image
Updated On :19 டிசம்பர் 2015, 4:34 pm IST

போலந்துத் துறவியான "ஹோபட்ஸ் கெய்ம்' சிறந்த ஞானி! எளிமையான வாழ்வை மேற்கொண்டவர். அவரைக் காண பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்தவண்ணம் இருந்தனர். அவர்களுக்குத் தன் யோசனைகளையும், நல்லாசிகளையும் வழங்கிக் கொண்டிருந்தார். மக்கள் தரும் அன்பளிப்புகளை எல்லாம் வறியோருக்குத் தந்து விடுவார். தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ள மாட்டார். இவரைப் பற்றிக் கேள்வியுற்ற ஒருவன் இவரைக் காண வந்தான்.

 ஞானியின் அறையை நோட்டம் விட்ட அவன், ""என்ன இது? தாங்கள் மிகவும் பிரபலமான ஞானியாயிற்றே! தங்கள் அறையில் தண்ணீர்ப் பானையும் சிறிது புத்தகங்கள் மட்டுமே உள்ளன. வேறு எதுவும் இல்லையா?''என்று கேட்டான்.

""சரி...,உன்னிடம் எவ்வளவு பொருட்கள் உள்ளன?''

""என்னிடம் ஏராளமான பொருட்கள் உள்ளன. நான் ஒரு செல்வந்தனும் ஆவேன்''

""உன் செல்வங்களையும், பொருட்களையும் உடனே எனக்குக் காட்டு!''

""நிச்சயமாக...! கிளம்புங்கள்...,என் வீட்டிற்குச் செல்லலாம்''

""நான் அங்கு வரமாட்டேன்...,இங்கேயே எனக்கு உன் செல்வத்தைக் காட்டு!''

""அதெப்படி? நான் இங்கு ஒரு விருந்தாளி போல் வந்தேன். சிறிது நேரத்தில் சென்று விடப்போகிறேன். அதற்காக இங்கு என்னுடைய எல்லாப் பொருட்களையும் சுமந்து கொண்டா வரமுடியும்?''

""நானும் இந்த உலகத்தில் ஒரு விருந்தாளியாகத்தான் வந்திருக்கிறேன்...எனக்கெதற்கு வீண் சுமை?'' என்றார் புன்னகையுடன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.