திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

பாதுகாப்பான இடம்!

முருகனும் லாரன்ஸூம் நண்பர்கள். அதுமட்டுமல்ல..., ஒரே அறையில் தங்கி இருப்பவர்கள். முருகனுக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் லாரன்ஸிடம்தான் பணம் கேட்பான்.

News image
Updated On :7 நவம்பர் 2015, 4:33 pm IST

முருகனும் லாரன்ஸூம் நண்பர்கள். அதுமட்டுமல்ல..., ஒரே அறையில் தங்கி இருப்பவர்கள். முருகனுக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் லாரன்ஸிடம்தான் பணம் கேட்பான்.

 அவனும் பணம் தர மறுப்பதில்லை. ஆனால் முருகன் கேட்கும் பணத்தை லாரன்ஸ் தன் பர்சில் இருந்தோ தன் பெட்டியிலிருந்தோ எடுத்துத் தருவதில்லை.

 அவர்கள் தங்கியிருந்த அறையின் சுவற்றில் மாதாவின் படம் ஒன்று மாட்டப்பட்டிருக்கும். மாதாவின் படத்திற்குக் கீழே உள்ள ஸ்டாண்டில் ஒரு பைபிள் வைக்கப்பட்டிருக்கும். தினமும் காலை, மாலை என்று பைபிளிலிருந்து இரண்டொரு பக்கங்களைப் படிக்கத் தவறுவதில்லை லாரன்ஸ்.

 முருகன் கேட்கும் பணத்தை பைபிளிலிருந்து எடுத்துத் தருவான். பணத்தை இப்படியா பத்திரப்படுத்துவார்கள்! முருகனுக்கு ஆச்சரியமாக இருக்கும்! அதைப்பற்றி சந்தேகம் கேட்பதற்கு முருகன் நினைப்பான். ஆனால் நண்பனின் மனம் சங்கடப்படுமோ என்று சும்மா இருந்துவிடுவான்.

 ஆனால் ஒரு நாள் வேடிக்கையாக,

 ""நமக்கு மனச்சங்கடம் ஏற்படும்போதெல்லாம் பைபிளை எடுத்து படிப்பது போல பணம் வேண்டுமென்றால்கூட பைபிளை நாட வேண்டும் போல இருக்கு''என்றான்.

 அதற்கு லாரன்ஸ், ""என்னைப் பொறுத்தவரை ரூபாய் நோட்டுக்களை பத்திரமாக வைக்க பர்சோ அல்லது பெட்டியோ பாதுகாப்பான இடம் அல்ல. நான் பைபிளைத்தான் பாதுகாப்பான இடம் என்று கருதுகிறேன். ஏனெனில் பைபிளை திறந்து பார்க்கிற எண்ணம் உடையவர்கள் அதற்குள் இருக்கும் பணத்தைத் திருட மாட்டார்கள். திருடுகிற புத்தி உள்ளவர்கள் பைபிளைத் திறக்கமாட்டார்கள்''

 நண்பனின் பதிலைக் கேட்டு அப்படியே அசந்து போனான் முருகன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.