அந்த வனத்தில் மரம், செடிகள் அடர்ந்திருந்தது. விலங்குகள் அதன் சரத்துகளில் போய்க் கொண்டிருந்தன. பறவைகளும் பாடி பறந்து கொண்டிருந்தன. ஒரே சரத்தில் சிறு உருவம் கருப்பாக வந்துகொண்டிருந்தது. அது முள்ளம்பன்றி.
அதன் உடலில் கருப்பு கூரிய முள்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இது உரோமம்தான் தடித்து முள்கள் போல் ஆகியிருந்தது. ஆனால் அது அப்பிராணி விலங்குதான்.
இதன் முள்கள் பிற விலங்குகள் மீது பட்டால், வலி உயிர்போகும் என்பதால், மற்றவை முள்ளம்பன்றியின் அருகே வராது. இதுவே முள்ளம்பன்றிக்கு வேதனையாக இருந்தது.
ஒருநாள் அழகிய புள்ளிமான் வந்தது. இதனிடம் முள்ளம்பன்றி, ""பார்த்தீங்களா? என்னைப் பார்த்து பலரும் அச்சப்படுகிறார்கள். யாரும் விளையாடவும் வர மறுக்கிறார்கள். நான் யாருக்கும் தொல்லை தர மாட்டேன்'' என்றது.
இதைகேட்ட மானின் மனம் இளகிவிட்டது. ""முள்ளம்பன்றியே.. இனி நாம் நண்பர்கள்'' என்று.
அன்று முதல் இரண்டும் ஒன்றாகப் போய்வந்தன. மற்ற விலங்குகள் மான்குட்டியை எச்சரித்தன. அதன் தாயும் எச்சரிக்கைவிட, ""நட்புக்காகதானே'' என்றே குட்டிமானும் சொல்லியது.
ஒரு நாள் புள்ளிமான் குட்டி ஒற்றைச் சரத்தில் வந்து கொண்டிருந்தது. எதிரே வந்த ஓநாய், மான் குட்டியின் மீது பாய்ந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த முள்ளம்பன்றியின் உடல் ஓநாய் மீது பட்டது. சில முள்கள் ஓநாயின் உடம்பில் பதம் பார்த்தது. வலி பொறுக்காமல் ஓநாய் அலறி ஓடியது.
அப்போது அங்கு வந்த பிற விலங்குகள், ""நீங்கள் நல்ல நண்பர்களே!'' என்று பாராட்டின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


