பத்திரமாய் வெடி

பட்டுப் பயலே பட்டாசை நீ பார்த்து வெடித்திடு !
பத்திரமாய் வெடி
Published on
Updated on
1 min read

பட்டுப் பயலே பட்டாசை

நீ பார்த்து வெடித்திடு !

சிட்டுப் பாப்பா சிரித்து மகிழ

மட்டாய் வெடித்திடு !

-

அண்ணனுக்கும் அளவாய்

வெடிக்கச் சொல்லிக் கொடுத்திடு !

மத்தாப்பை கொளுத்தி-நீயும்

மகிழ்ச்சியாய் இரு !

-

கயிறு கொளுத்தி -நீயும்

ஒளியின் தீபம் பார்த்திடு!

சின்னவெடி பெரிய வெடி -நீயும்

பார்த்து வெடித்திடு!

-

ஊசி பட்டாசு மிளகாய் பட்டாசு -நீயும்

கட்டாய் வெடித்திடு!

துப்பாக்கியில் சுருள் வெடியை

சுருட்டி வெடித்திடு !

-

சட சடன்னு பட்டென்று வெடிக்க

நீயும் பார்த்திடு!

கேப் வெடியை வெடித்திடு!

டாப் வெடியை வெறுத்திடு!

-

சுற்றுச்சூழல் பார்த்து நீயும்

தூசை வெறுத்து வெடித்திடு!

அணுகுண்டு வெடிக்க- நீயும்

பயந்து விடு!

-

அது ஆளையும் மிரட்டிப் பார்க்கும் தெரிந்துவிடு!

சங்கு சக்கரம் வீட்டுக்குள்ளே

கொளுத்திப் பார்த்திடு!

அது சுற்றிச் சுழலும் சிரிப்பழகை -நீயும்

-

ரசித்து மகிழ்ந்திடு !

புஸ்வானம் கொளுத்தி -நீயும்

ஒளித் தூறல் பார்த்திடு!

சிதறும் ஒளியின் துகளைப் பார்த்து-

நீயும் மகிழ்ந்திடு!

-

விபத்து இல்லாப் பட்டாசை

நீயும் வெடித்திடு !

ஆபத்தில்லா தீபாவளியை சிரித்துக் கொண்டாடு!

ஆரிசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com