கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

சந்தக்கவி தந்த தமிழருவி!

சங்கத் தமிழ் போற்றும் திருமுருகாற்றுப்படைக்குப் பின் தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றிய இசைப்பாடல்களுள் சிறந்து நிற்பது அருணகிரிநாதரின் சந்தப் பாடல்களான "திருப்புகழ்' பாடல்கள் மட்டுமே.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 11:11 pm IST

சங்கத் தமிழ் போற்றும் திருமுருகாற்றுப்படைக்குப் பின் தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றிய இசைப்பாடல்களுள் சிறந்து நிற்பது அருணகிரிநாதரின் சந்தப் பாடல்களான "திருப்புகழ்' பாடல்கள் மட்டுமே.

அருணகிரிநாதருக்குப் பின்னும் முன்னும் இத்தனை சந்தமும் இசையும் அமைய மனமுருகிப் பாடியவர் எவருமில்லை.

காவடிச் சிந்தும் கும்மியும் பிற்காலத்தில் பாடி மகிழ்வுறப் பிறந்தன எனினும் சந்தமும் அழகும் அருணகிரிக்கே உரியவை.

அதிலும் குறிப்பாக இசைக் கருவிகளின் பல்வேறு ஓசைகளைக்கூட தமது சந்தப் பாடல்கள் வாயிலாகத் திறம்பட கையாண்டவர் அவரை, தடையில்லாத தமிழருவி என்றாலும் மிகையில்லை.

இருமிக் கொண்டும், கோல் ஊன்றிக் கொண்டும், பார்வை குறையுடன் தட்டுத் தடுமாறி தளர்ந்து வரும் வயதான கிழவனைத் தனது சொல்லோவியத்தில் பாடும் அழகைப் பாருங்கள்.

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் - நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு - செவியாகி

குழந்தை ராமனைக் கொஞ்சும் கோசலையாகி பாலூட்டும் அருணகிரியார் அவரை அழைப்பதைப் பாருங்கள்.

எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக - அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல - வருமாயன்


காலில் தண்டையுடன் வருகை புரியும் முருகன் மணியோசை கேட்கிறது அருணகிரிநாதரின் சந்தப் பாடலில்... எழுத்தில்...

தண்டையணி வெண்டையங்
கிண்கிணிச் சதங்கையுந்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே...
எனக் கொஞ்சுகிற அழகல்லால் வேன்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.