மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

உலகளவில் கரோனாவால் 26.25 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26.25 கோடியாக அதிகரித்துள்ளது. 

News image

உலகளவில் கரோனாவால் 26.25 கோடி பேர் பாதிப்பு

Updated On :28 ஜனவரி 2024, 11:05 am IST

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26.25 கோடியாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும்  நோய் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26.25 கோடியாக அதிகரித்திருக்கிறது.

தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.84 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.78 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.45 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.68 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளாக பிரேசில்- 2.21 கோடி , இங்கிலாந்து - 1.02 கோடி , ரஷியா - 94.7 லட்சம், துருக்கி - 87.32 லட்சம்,  பிரான்ஸ் -77.48 லட்சம் ,   அர்ஜென்டினா- 53.85 லட்சம்  , ஈரான்- 61.94 லட்சம் , கொலம்பியா - 50.67 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கையில் இருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கை - பிரேசில் (6,09,099) இந்தியா  (4,59,851), மெக்ஸிகோ  (2,93,897), பெரு  (2,01,158), ரஷியா  (2,39,403),  இந்தோனேசியா  (1,43,819), இங்கிலாந்து  (1,45,253) இத்தாலி  (1,33,739), கொலம்பியா  (1,27,451), பிரான்ஸ்  (1,18,820)  ஈரான் (1,29,711) , அர்ஜென்டினா (1,16,554)

உலகளவில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 50.20 லட்சமாக உயர்ந்திருக்கிறது.தொற்றிலிருந்து மீண்டவர்கள் 25.42 கோடி பேர்.

மேலும் உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க இதுவரை 795 கோடி தடுப்பூசிகள்   செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.