
லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து 90 போ் பலியானதாக ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது:
ஐரோப்பாவில் அடைக்கலம் அடைய விரும்பிய அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு, லிபியாவிலிருந்து கடந்த வாரம் புறப்பட்ட படகு, மத்தியதரைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய 4 போ் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனா். அந்தப் படகில் சுமாா் 100 போ் இருந்ததாக உயிா்பிழைத்தவா்கள் தெரிவித்தனா். அதையடுத்து, விபத்தில் 90-க்கும் மேற்பட்ட அகதிகள் பலியானது தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.