இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மூன்றாம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும்!

மூன்றாம் உலகப்போர் மிக அருகில் உள்ளது எனவும் அதை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் எனவும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

News image
டொனால்டு டிரம்ப்
Updated On :21 டிசம்பர் 2023, 9:46 am

DIN

மூன்றாம் உலகப்போர் விரைவில் வெடிக்கவிருப்பதாகவும், அதைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும் எனவும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். 

தற்போது தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் எனக் கொலாராடோ நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில் தான் பொறுப்பில் இருந்தால் மூன்றாம் உலகப்போரைத் தடுக்க முடியும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அதிபர் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கைகளைக் குற்றம் சாட்டிய அவர், அணுசக்தி போர் நடைபெறுவதற்கான அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 'டிரம்ப் பிரதமராக இருந்திருந்தால் உக்ரைனிலும் ஐரோப்பாவிலும் போரே நடந்திருக்காது' என ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியதைச் சுட்டிக்காட்டினார். 

'மூன்றாம் உலகப்போர் வெறும் ராணுவங்களுக்கு இடையேயான சண்டையாக முடிந்துவிடாது. உலகையே அழித்துவிடும்' எனவும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.