விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

“ஆயுதங்கள் அமைதியடைவதாக..” -உக்ரைன், காஸா குறித்து போப் கவலை!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை...

News image

AP

Updated On :25 டிசம்பர் 2024, 12:41 pm

DIN

வாடிகன்: உக்ரைன், காஸா நிலவரம் குறித்து போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடினர். நேரலையாக ஒளிபரப்பட்ட இந்நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

அப்போது பேசிய போப் பிரான்சிஸ், “‘போர்; துப்பாக்கி ஏந்திய குழந்தைகள்; பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை’ இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Story image

உலக மக்களுக்கு போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் பேசியதாவது, “போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் ஆயுதங்களின் ஒலி அமைதியடைவதாக; அங்கு அமைதி நிலவ வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படட்டும். பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்படட்டும். போர், பசியால் தீரா களைப்படைந்துள்ள மக்களுக்கு உதவிப் பொருள்கள் சென்றடையட்டும்.

சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் (லெபனான், சிரியா உள்பட மத்திய கிழக்கு பகுதிகள்) அமைதிக்கும் பேச்சுவார்த்தைக்குமான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கட்டும்.”

Story image

சுகாதாரப் பணியாளர்கள், சேவைத் தொண்டாற்றும் ஆண்கள், பெண்கள், தொண்டு நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக உலகெங்கிலும் சேவையாற்றும் கிறிஸ்துவ மடங்கள் ஆகியோருக்கு நன்றியை உரித்தாக்குவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள போப் பிரான்சிஸ், இன்னலில் தவிக்கும் ஏராளமான மக்களின் வாழ்க்கையில் மேற்கண்டோர் ஒளியை ஏற்றுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொருவருக்கும் அமைதியான, ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார் போப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.