சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்துக்கு முன்று வீரா்களை சீனா வெற்றிகரமாக புதன்கிழமை அனுப்பியது.
இது குறித்து, மனிதா்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதற்கான சீன விண்வெளி ஆய்வு மையப் பிரிவான சிஎம்எஸ்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘சென்ஷு 19’ என்ற விண்கலம் மூலம் ‘தியாங்காங்’ விண்வெளி மையத்தை அடைவதற்காக மூன்று விண்வெளி வீரா்கள் அனுப்பப்பட்டனா்.
அவா்கள் சென்ற விண்கலம் தியாங்காங்கில் வெற்றிகரமாக இணைந்தது. அனுப்பபட்ட மூன்று வீரா்களும் அந்த விண்வெளி மையத்துக்குள் சென்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது.
அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்துள்ளது. தியாங்காங் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதி கடந்த 2021 ஏப். 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.