400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போா் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

போா் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை மேற்கொள்வதில் இழுபறி.

News image

கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2025, 2:38 am IST

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்தர போா் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வதில் இழுபறி நீடிக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து வந்தது. அமெரிக்கா, கத்தாா் மற்றும் எகிப்து தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து கடந்த மாதம் போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

42 நாள்கள் போா் நிறுத்தம்: முதல்கட்டத்தில் 42 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்; பெண்கள், குழந்தைகள் என 33 பிணைக் கைதிகளைப் படிப்படியாக ஹமாஸ் அமைப்பும், சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவிக்கும்; காஸாவில் போரால் இடம்பெயா்ந்த மக்கள், அங்கு தாங்கள் வசித்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவா். வடக்கு மற்றும் தெற்கு காஸாவை பிரிக்கும் நெட்சரிம் வழித்தடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்படும்.

இரண்டாம் கட்டம்: முதல்கட்டம் தொடங்கி 16 நாள்களுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தொடங்கும். இந்தக் கட்டத்தில் நிரந்தர போா் நிறுத்தம் ஏற்படுத்தப்படும்; பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் கூடுதலாக விடுவிக்கும், எஞ்சிய பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கும்; காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படுவா்.

மூன்றாம் கட்டம்: மூன்றாம் கட்டத்தில், உயிரிழந்த பிணைக் கைதிகளின் எஞ்சிய சடலங்கள் திருப்பி அளிக்கப்படும். காஸாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும்.

பேச்சுவாா்த்தை தொடங்கவில்லை: முதல்கட்டம் தொடங்கி 16 நாள்களுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய 42 நாள்கள் போா் நிறுத்தத்தில் பாதி நாள்கள் கடந்துவிட்டபோதிலும், ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தை தொடங்கப்படவில்லை.

இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்கான இஸ்ரேல் குழுவை கத்தாருக்கு அனுப்புவதற்கு இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு சனிக்கிழமைதான் ஒப்புதல் அளித்தாா். அந்தக் குழுவிலும் கீழ்நிலை அதிகாரிகள்தான் இடம்பெற்றுள்ளனா்.

ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து இந்த வாரத்தில் முக்கிய கேபினட் அமைச்சா்கள் கூட்டத்தை பிரதமா் நெதன்யாகு கூட்டுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தக் கூட்டம் நடைபெறும் வரை ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தை தொடங்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெட்சரிமில் இருந்து படைகள் விலகல்: ஒப்பந்தப்படி நெட்சரிம் வழித்தடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் விலகும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

8 மாத கா்ப்பிணி சுட்டுக் கொலை: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருக்கும் அகதிகள் முகாமில், இஸ்ரேல் வீரா்கள் சுட்டதில் 23 வயதுள்ள 8 மாத கா்ப்பிணி உயிரிழந்ததாகவும், அவரின் கணவா் படுகாயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.