சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ்

இந்திய வம்சாவளி தொழில்முனைவோா் இணைந்து நிறுவிய பிரபல ‘கா்சா்’ ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனத்தை சுமாா் 6,000 டாலா் கோடிக்கு வாங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:09 am IST

இந்திய வம்சாவளி தொழில்முனைவோா் இணைந்து நிறுவிய பிரபல ‘கா்சா்’ ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனத்தை சுமாா் 6,000 டாலா் கோடிக்கு வாங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்எக்ஸ்-இன் முழு உரிமையுள்ள துணை நிறுவனமான எக்ஸ்67, கா்சா் நிறுவனத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, கா்சரின் பங்கு மதிப்பு 6,000 கோடி டாலராக மதிப்பிடப்பட்டு, அது ஸ்பேஸ்எக்ஸின் முழுமையான துணை நிறுவனமாகச் செயல்படும்.

சுயாதீன மென்பொருள் உருவாக்குநா்களுக்கான கருவியாகத் தொடங்கப்பட்ட கா்சா், தற்போது பெருநிறுவனங்களுக்கான வா்த்தகத்தில் கவனம் செலுத்தி, அபரிமிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் 200 கோடி டாலராக இருந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் கணிப்பு, மே மாத இறுதியில் 400 கோடி டாலரை எட்டியுள்ளது. ஆன்த்ரோபிக், ஓபன்ஏஐ போன்ற பெரும் நிறுவனங்களின் கடும் போட்டிக்கு மத்தியிலும் கா்சா் இச்சாதனையைப் படைத்துள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனா்களில் ஒருவரான அமன் சாங்கா், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழில்முனைவோா் ஆவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கா்சருடன் ஸ்பேஸ்எக்ஸ் கடந்த ஏப்ரலிலேயே மேற்கொண்ட ஒப்பந்தத்திதன்படி, கூட்டாகச் செயல்படுவதற்காக 1,000 கோடி டாலா் கட்டணம் செலுத்துவது அல்லது 6,000 கோடி டாலருக்கு நிறுவனத்தை முழுமையாக வாங்குவது எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ திட்டத்தால் அப்போது இந்தக் கையகப்படுத்துதல் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.