டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காக ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்க துணை அதிபர்!

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஸ்விட்சர்லாந்து சென்றது பற்றி...

News image

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ். - படம் - ஏஎன்ஐ

Updated On :21 ஜூன் 2026, 12:59 pm IST

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) ஸ்விட்சர்லாந்து சென்றடைந்தார்.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்பட்டதையடுத்து, அமெரிக்காவும் - ஈரானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதைத் தொடர்ந்து, ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிராக அந்நாட்டின் தெற்கு மாகாணங்களின் மீது வியாழக்கிழமை (ஜூன் 18) இரவு முதல் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதன் விளைவாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதாக ஈரான் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் ஸ்விட்சர்லாந்து சென்றடைந்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தொழில்நுட்ப விவரங்களை ஆராய்ந்து தீர்வு காண்பது, லெபனான் போர்நிறுத்த விவகாரம் குறித்து முக்கிய முவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

US Vice President J.D. Vance arrived in Switzerland on Sunday (June 21) for talks with Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.