பசுமை வீடு திட்டம்:  அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பில் மாறுதல் கூடாது- ஆட்சியர் - Dinamani - Tamil Daily News

பசுமை வீடு திட்டம்:  அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பில் மாறுதல் கூடாது- ஆட்சியர்

First Published : 10 November 2012 10:20 AM IST

பசுமை வீடு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டின் வடிவமைப்பில் மாறுதல் ஏதும் செய்யக் கூடாது என்றும், விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடத்தின் உரிமை ரத்து செய்யப்படுவதுடன் பணமும் திரும்ப வசூலிக்கப்படும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ந. வெங்காடசலம் எச்சரித்துள்ளார்.
 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 சென்னை ஊரக வளர்ச்சித் துறை இயக்கக் கூடுதல் இயக்குநர் எம். பரமேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது:
 மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் மாநிலத்தில் முதன்மை திட்டமாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களுக்கு 2,172 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடு அமைக்க ரூ. 1.5 லட்சம், சூரிய மின்சக்தியுடன் கூடிய விளக்குகள் அமைக்கும் பணிக்கு ரூ. 30 ஆயிரம் என மொத்தம் ரூ. 1.8 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
 இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களில் 4,944 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது 173 வீடுகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பசுமை வீடு திட்டத்தில் அரசினால் அனுமதிக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பு மற்றும் அளவீடுகளின்படியே கட்டுமானம் அமையவேண்டும்.
 ஒவ்வொரு பசுமை வீடும் அனுமதிக்கப்பட்ட பரப்பளவான 300 சதுரடிக்கு குறையாமலும், வீட்டின் வடிவமைப்பை மாறுதல் செய்யாமலும், அதன் கட்டட பரப்பளவில் மாறுதல் செய்யாமல், அதே நேரத்தில் சமையலறை மற்றும் படுக்கையறை ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கலாம்.
 பசுமை வீட்டுக்கான சூரிய சக்தியில் இயங்கும் 5 மின்விளக்குகளும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையினால் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் விளக்குகளை ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் பராமரிப்பு செய்ய உள்ளனர்.
 எனவே, வீட்டின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய விளக்குகளுக்கான அமைப்புகள் எதற்கும் இடையூறாக இருக்கக் கூடாது என்பதால், வீட்டின் மேல்பகுதியில் எந்தவித மாறுதலும் மற்றும் முதல் தளம் போன்ற எந்தவித கட்டுமானங்களையும் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
 அரசின் விதிமுறைகளுக்கு மாறாகக் கட்டப்படுமானால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வேலை உத்தரவு ரத்து செய்யப்படும். இந்த வீட்டுக்காக வழங்கப்பட்ட கட்டுமானப் பொருள்களின் தொகை மற்றும் வழங்கப்பட்ட பட்டியல் பணம் ஆகியவை பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும் என்றார் ஆட்சியர்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.