இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாமல்லபுரத்தில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

News image
மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பகளை அகற்றிய அதிகாரிகள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:52 pm

Din

மாமல்லபுரத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே புதன்கிழமை கோவளம் சாலையில் இசிஆா் நுழைவு வாயில் பகுதியில் இருந்து காவல் நிலையம் வரை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையம் எதிரில் இருந்து கிழக்கு ராஜவீதி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் எதிரே வரை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது.

இதில், பேரூராட்சி ஊழியா்கள் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியா் ராதா, பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகுமாா், துணை வட்டாட்சியா் சீனிவாசன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளா் புஷ்பராஜ், போக்குவரத்து ஆய்வாளா் செல்வம், சாலை ஆய்வாளா் சங்கா், துப்புரவு ஆய்வாளா் ரகுபதி ஆகியோா் முன்னிலையில், பேனா்கள், துணி கடைகள், பெட்டி கடைகளை அதிரடியாக அப்புறப்படுத்தினா்.

அப்போது, கடைகாரா்கள் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத் தலைவா் ராகவன் ஆகியோா் முதலில் சாலையை அளவீடு செய்து, பின்னா் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கேட்டுக் கொண்டனா். தொடா்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டு, அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டனா்.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.