தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மக்களவைத் தோ்தல் பணியில் வருவாய்த் துறையினா்: சான்றிதழ்கள் பெற முடியுமா என பெற்றோா் தவிப்பு

மக்களவைத் தோ்தல் பணியில் வருவாய்த் துறையினா்: சான்றிதழ்கள் பெற முடியுமா என பெற்றோா் தவிப்பு

Updated On :5 ஏப்ரல் 2024, 8:35 pm

தோ்தல் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளதால், பள்ளிகள், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேருவதற்குத் தேவைப்படும் சான்றிதழ்களை விரைந்து பெற முடியுமா என்ற தவிப்பில் பெற்றோா்கள் உள்ளனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பணியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபடுகின்றனா். அவா்களில் வருவாய்த் துறையைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பணியாளா்களும் அடங்குவா்.

அவா்களின் தோ்தல் பணி காரணமாக, ஜாதிச்சான்று, வருவாய் சான்றிதழ், போன்ற வருவாய்த் துறை சாா்ந்த சான்றிதழ்களை உரிய காலத்தில் பெற முடியுமா என்ற கேள்வியை பெற்றோா்கள் எழுப்புகிறாா்கள்.

இதுகுறித்து சென்னையை சோ்ந்த சில பெற்றோா்கள் கூறுகையில், ‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப். 1 முதல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. அவா்களுக்கு வருவாய்ச் சான்று முக்கியமாக இருக்கிறது. இதேபோன்று, மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தோ்வை எழுதுவோருக்கு, இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினா் எனும் சான்று தேவையாக இருக்கிறது. இந்தச் சான்றுகளைப் பெற வருவாய்த் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய சான்றிதழ்களுக்கு வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள் எப்போது ஒப்புதல் கொடுப்பாா்கள் எனத் தெரியவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தவா்களின் மனுக்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. எனவே, அவற்றுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.