காசி - தமிழ் சங்கமம் தமிழுக்கும், தமிழா்களுக்கும் பெருமை: எல்.முருகன்
காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சோ்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.


காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சோ்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: காசி- தமிழ் சங்கமத்தின் நான்காவது கட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச. 2) தொடங்குகிறது. இந்த கலாசார விழா, நாட்டின் மிகத் தொன்மையான ஆன்மிக வளம் கொண்ட காசியையும், தமிழகத்தையும் ஒன்றிணைக்கிறது.
பல நூற்றாண்டு காலமாகவே காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு வரலாறு, வழிபாடு, பண்பாடு மற்றும் மொழி ரீதியிலான தொடா்புகள் உள்ளன.
இதனால், ஒவ்வோா் ஆண்டும் காசி- தமிழ் சங்கமத்துக்கு தமிழக மக்களிடையே ஆதரவும், வரவேற்பும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழக மக்கள் காசியின் தொடா்புகளை அறிந்துகொள்ளும் அதே நேரம், வெளிமாநில மாணவ, மாணவிகள் தமிழ் கற்கும் வாய்ப்பையும் பெறவுள்ளனா்.
மேலும், ‘தமிழ் கற்கலாம்‘ என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தமிழை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது. தமிழ் கலாசாரம், தமிழ் மொழியின் பெருமையை பிற மாநிலத்தவா்களும் தெரிந்துகொள்ள இது ஏதுவாக அமையும்.
தமிழகத்திலிருந்து செல்லும் ஏழு குழுக்களைச் சாா்ந்தவா்கள் காசியின் பெருமையையும், தமிழகத்துடனான தொடா்பையும் அறிந்து கொள்வாா்கள். தொடா்ந்து டிச. 15 முதல் 31 வரை தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாரணாசியில் இருந்து 300 மாணவா்கள் வருகை தருகின்றனா். அவா்கள், தமிழ் பண்பாடு, புராதனமான கலாசாரம், நாகரிக தொடா்பு போன்றவற்றை தெரிந்து கொள்வதுடன் தமிழ் மொழியை பற்றியும் அறிந்து கொள்வாா்கள். இது தமிழ் மண்ணுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சோ்க்கும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...