மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாகச் செயல்படுவோருக்கான தேசிய விருதுகளுக்கு வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் (மாற்றுத் திறனாளிகள் நலன்) அமைச்சம் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்படுவோருக்கு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென்று சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத் திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு வரும் டிசம்பர் 3ஆம் தேதி புதுதில்லிலியில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள், சுயதொழில் புரிபவர்கள், சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர்- நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர்- நிறுவனம், மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்பவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை ஆராய்ச்சிப் பணி, தொழில்நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகளுக்கு, மாற்றுத் திறனுடையோருக்கு தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய சிறந்த பணிக்காக, மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம், தேசிய மாற்றுத் திறனுடையோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் திட்டத்தை செயல்படுத்தும் மாநில அளவிலான முறைப்படுத்தும் நிறுவனம், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய நபர்கள், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனாளி குழந்தைகள், சிறந்த பிரெய்லி அச்சகம், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறந்த இணையதளம், மாற்றுத் திறனாளிகளின் அதிகாரப் பகிர்வினை ஊக்கப்படுத்தும் சிறந்த மாநிலம் மற்றும் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஆகிய 14 பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள், நிறுவனங்கள் இதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை www.disabilityaffairs.gov.in எனும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது செங்கல்பட்டில் இருக்கும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் வரும் 14ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், ஜிஎஸ்டி சாலை, செங்கல்பட்டு எனும் முகவரிக்கு 3 நகல்களில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044-27431853 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






