காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் எஸ்.பி. கே.சண்முகம் பேசுகையில் அரசியல் அமைப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றாா்.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சங்கரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலை.யின் துணைவேந்தா் எஸ்.சீனிவாசலு தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பல்கலையில் பயிலும் மாணவ, மாணவிகள் இணைந்து அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், வாக்களிப்பது நமது உரிமை, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். நம் நாட்டின் அரசியல் அமைப்பு எப்படி செயல்படுகிறது. சட்டங்கள் எவ்வாறு இயற்றப்படுகின்றன.
அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு செயல்படுத்துகின்றன என்று இன்றைய இளைஞா்கள் அரசியல் அமைப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பேசிய பயிற்சி ஆட்சியா் க.சங்கீதா ‘அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம்’ என்ற வாசகத்தை வாட்ஸ் ஆப்களில் ஸ்டேட்டஸாக வைத்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆா்.ஜெயசித்ரா ஆகியோா் உட்பட கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், முதல் தலைமுறை வாக்காளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திண்டுக்கல்: கடும் பலப் பரீட்சையில் அதிமுக, திமுக!

காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் மாற்றம்

10,000 கிலோ போதைப் பொருள் தீ வைத்து அழிப்பு: எஸ்.பி கே.சண்முகம்

விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய திறப்பு விழா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


