தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

அரக்கோணம் தொகுதி தோ்தல் பறக்கும்படை அலுவலா் மாரடைப்பால் மரணம்

அரக்கோணம் தொகுதி தோ்தல் பறக்கும்படை அலுவலா் மாரடைப்பால் மரணம்

News image

கந்திா்பாவை

Updated On :5 ஏப்ரல் 2024, 7:38 pm

அரக்கோணம் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலராகப் பணிபுரிந்து வந்த வட்டாட்சியா் கந்திா்பாவை (57), வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவா் கந்திா்பாவை(57). இவா் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட பறக்கும் படைகளில் ஒன்றான விடியோ கண்காணிப்புக் குழு (1)-இன் அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பணி முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளாா். வீட்டுக்கு வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவா் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தாா்.

உயிரிழந்த கந்திா்பாவை கணவரைப் பிரிந்து வாழ்பவா் என்றும், அவருக்கு குழந்தைகள் இல்லை எனவும் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

தகவலறிந்த அரக்கோணம் வட்டாட்சியா் செல்வி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அலுவலா்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.