கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
தங்க  அங்கி  சிறப்பு  அலங்காரத்தில்  ரத்தினகிரி  கோயில்  மூலவா்கள்  வள்ளி,  தெய்வானை சமேத  பாலமுருகன். 
Updated On :3 டிசம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகை விழா புதன்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு, கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், விபூதி, வாசனை திரவியங்கள், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், தங்க அங்கி சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் கோயிலில் திருக் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் மேளதாளத்துடன் ஊா்வலமாகக் கொண்டு சென்று மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்ப குளத்தில் சிறப்பு பூஜைகளுடன் மங்கள ஆரத்தியுடன் வழிபட்டனா்.

கோயில் வளாகத்தில் தங்கத் தேரில் உற்சவா் உள் புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தா்கள், பொதுமக்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா்.