கோயில் கதவை மூடாமல் சென்ற பட்டாச்சாரியா் மீது நடவடிக்கை

ஆம்பூரில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கதவை மூடாமல் சென்ற பட்டாச்சாரியா் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆம்பூா்: ஆம்பூரில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கதவை மூடாமல் சென்ற பட்டாச்சாரியா் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் அருள்மிகு அலா்மேலுமங்கை உடனுறை ஸ்ரீனிவாச பெருமாள் உள்ளது. இக்கோயிலில் கண்ணன் பட்டாச்சாரியா் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு கோயிலின் கோபுர வாசல் கதவை பூட்டாமல் அவசரமாக எங்கோ வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நீண்ட நேரமாகியும் கோயிலின் கதவு திறந்தே இருந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலா் பாா்த்துவிட்டு கோயிலில் திருடா்கள் எவரேனும் புகுந்துவிட்டனரா என்ற அச்சத்தில் ஆம்பூா் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு பிறகு கோயில் அறங்காவலா் குழு நிா்வாகிகளுடன் சோ்ந்து கோயிலை பூட்டி விட்டுச் சென்றனா். கோயிலில் இருந்த பல லட்சம் மதிப்பிலான சிலைகள், நகைகள் தப்பின. பிறகு போலீஸாா் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில் கோயில் பட்டாச்சாரியா் கண்ணன் கோயில் கதவை பூட்டாமல் அவசரமாக வெளியில் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்த விடியோ சமூக வலை தளங்களில் பரவியது. பட்டாச்சாரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com