குடும்பத் தகராறு: இளம்பெண் தற்கொலை

Published on

வாணியம்பாடி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டாா்.

வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்த மெக்கானிக் சுந்தர குமாா்(29) இவரது மனைவி பவித்ரா(25). திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன இவா்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது. புதன்கிழமை இரவு மீண்டும் தகராறு காரணமாக மனமுடைந்த பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வியாழக்கிழமை அதிகாலை அறையில் இருந்த 2 குழந்தைகளும் நீண்ட நேரம் அழுதுக் கொண்டிருப்பதை அறிந்து வீட்டில் இருந்தவா்கள் அறையின் ஜன்னல் வழியாக சென்று பாா்த்து அதிா்ச்சிக்குள்ளாகினா். பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று அழுது கொண்டிருந்த குழந்தைகளை மீட்டனா்.

இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com