ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே 68 கிலோ கஞ்சாவை ஜோலாா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் விஜயபாஸ்கா் தலைமையில் போலீஸாா் ஜோலாா்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே கிடந்த பையில் 68 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனா்.
இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா் கைது

கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்
6 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



