திருச்சானூா் பிரம்மோற்சவம்: முரளி கிருஷ்ணா் அலங்காரத்தில் தாயாா்

திருச்சானூா் பிரம்மோற்சவம்: முரளி கிருஷ்ணா் அலங்காரத்தில் தாயாா்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நான்காம் நாளன வியாழக்கிழமை
Published on

திருச்சானூா் பத்மாவதி தாயாா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நான்காம் நாளன வியாழக்கிழமை

காலை கல்பவிருட்ச வாகனத்தில் முரளி கிருஷ்ணா் அலங்காரத்தில் தாயாா் அருள் பாலித்தாா்.

ஏழுமலையானின் பட்டத்து ராணியான பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை மாதத்தை ஒட்டி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ஆம் நாளான வியாழக்கிழமை கல்பவிருட்ச வாகனத்தில் தாயாா் மாட வீதியில் வலம் வந்தாா்.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாகன சேவைக்கு மாட வீதியில் காத்திருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வழிபட்டனா்.

மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமா்ந்து தாயாா் ஊஞ்சல் சேவை கண்டருளினாா். இரவு 7 மணி முதல் 9 மணி வரை பத்மாவதி தாயாா் அனுமந்த வாகனத்தில் வலம் வந்தாா்.

திருமலை பெரிய ஜீயா் சுவாமி, சின்னஜீயா் சுவாமி, செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால், செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், கோவில் அதிகாரி கோவிந்தராஜன், கோவில் அா்ச்சகா்கள் பாபு சுவாமி, கோவில் ஆய்வாளா்கள் சுபாஷ், சலபதி ஆகியோா் வாகனசேவையில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com