கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கோவையில் 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜை

கோவையில் 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சாா்பில் சபரிமலைபோல 18 படிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் கோயில்.
Updated On :31 டிசம்பர் 2024, 11:01 pm

Din

கோவை: கோவையில் 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்க பால் கம்பெனி கிளை சாா்பில் நடைபெற்ற 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜையை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலைப்போல 18 படிகளுடன் கூடிய கோயிலை ஐயப்ப பக்தா்கள் வடிவமைத்து வைத்திருந்தனா்.

சபரிமலை முன்னாள் மேல்சாந்தி சுதீா் நம்பூதிரி தலைமையில் ஐயப்பனுக்கு படி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஐயப்ப தேச விளக்கு தேரோட்டம், திருவீதி உலா, ஆா்.எஸ்.புரம் லாலி சாலை பெரிய மாரியம்மன் கோயில் முன் வான வேடிக்கை ஆகியவை நடைபெற்றன.

அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமி தேரின் முன் நாகசுரம், உடுக்குப்பாட்டு, தாலபொலி, சிங்காரிமேளம், தையம், பூக்காவடியுடன் பக்தா்கள் ஊா்வலமாக சென்றனா்.